விடுதலைப்புலிகள் இல்லாத இக்கால கட்டத்தில் தமிழ் மக்கள்
பாரதூரமான இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்கி வருவதாகத்
தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட
எம்.பி.யுமான இரா. சம்பந்தன் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம் பெற்ற
மனித அவலங்களில் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இங்கிலாந்தின்
சனல் 4 தொலைக்காட்சி ஊடகம் தனது கடமையை நேர்மையாக
நிறைவேற்றியிருக்கின்றது என்றும் கூறினார்.
தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கென அரசாங்கத்தால்
நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கை கிடையாது என்பதால் அதில்
இணைவதற்கு தயாரில்லை என்றும் சம்பந்தன் எம்.பி. நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2014ஆம்
ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம்
நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்
தெரிவித்தார்.
சம்பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்
மூன்று தசாப்த காலங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின்
ஆதிக்கம் இந்நாட்டில் இருந்த நிலையில் அந்த அமைப்பினது அழிவுடன்
நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட்டு விடும் என்று
அரசாங்கத்தினால் நம்பப்பட்டது. புலிகளைப் பொறுத்தவரையில் அந்த
அமைப்பு நாட்டுக்கு பிரச்சினையாக இருந்தது. விடுதலைப் புலிகளின்
தோற்றமானது தவிர்க்க முடியாததும்
நியாயப்படுத்தக்கூடியதுமாகவே அமைந்திருந்தது.
எனினும் எதேச்சாதிகார செயற்பாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயல்கள்
ஆகியவற்றைக் காரணம்காட்டி அந்த அமைப்பு உலகின் பல நாடுகளிலும் தடை
செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்பை பொறுத்த
வரையில் அந்த அமைப்பானது முரண்பாடுகளுக்கு காரணமாக
அமைந்திருப்பதாகவும் அதே நேரம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு
அரசியல் ரீதியிலான தீர்வொன்று அவசியப்பட்டிருப்பதும்
உணர்த்தப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகளை
அழித்துவிட்டால் நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலை பெற்றுவிடும்
என்று கூறியது. எனினும்இ அந்த கருத்து பொருட்படுத்த முடியாததும்
கேள்விக்குரியதாகவும் அப்போது இருந்தது. இன்றைய இலங்கையைப்
பொறுத்தவரையில் பொறுப்புப்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரு
விடயங்களை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றன.
பொறுப்புக்கூறுதலில் உண்மைத்தன்மை வெளிக்காட்டப்படாத பட்சத்தில்
நல்லிணக்கம் என்பது ஏற்படப் போவதில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்த காலத்தினைவிட புலிகள்
அமைப்பு இல்லாத இக்கால கட்டத்திலேயே தமிழ் மக்கள் பாரிய
கஷ்டங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் மீது
எதனையும் பிரயோகிக்க முடியும் என்பதும் எதுவென்றாலும் தமிழர்கள்
ஏற்றுக்கொள்வார்கள் என்பதுமே இன்றைய அரசாங்கத்தின் மனோநிலையாக
இருந்து வருகின்றது. இன்றைய நிலைமை போன்று புலிகள் இருந்த
காலக்கட்டத்தில் இருக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்திக்
கூறுகிறேன்.
வடக்கில் இராணுவப் பிரசன்னம் ஆளுநராகவும் அரச அதிபராகவும்
இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்
நிர்வாக ரீதியிலும் இராணுவத்தின் ஈடுபாடு அதிகரித்துக்
காணப்படுவதால் அங்கு ஓர் அச்ச உணர்வு உணரப்படுகின்றது. அது
மாத்திரமின்றி தமிழ் அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் தமிழ்
மக்களுக்கான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்க
முடியாதவர்களாக இருக்கின்றனர்.
தமிழ் மக்கள் அரசுக்கு ஆதரவாக செயற்படாத காரணத்தால் அவர்கள்
தண்டிக்கப்படுகின்ற நிலையும் தற்போது காணப்படுகின்றது. இது
இன்னும் எவ்வளவு காலத்திற்கு தொடரப் போகின்றது என்பது கேள்வியாகும்.
பாரிய குறைபாடுகள், இன்னல்கள், சிக்கலான சூழ்நிலைகள்
ஆகியவற்றுக்கு மத்தியில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களுக்கான
தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில்
தமிழத் தேசியக் கூட்டமைப்பைச்சேர்ந்த 11 பேர் தெரிவாகியிருந்தனர்.
வட மாகாணத்துக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
சார்பில் 29 பேர் தெரிவாகியிருந்தனர்.
ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நிரந்தரமானதுமான அரசியல்
தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கிலானதும் தமிழர்களுக்கேயான
சுயாட்சி ஒன்றை நிறுவுவதற்குமான அபிலாஷைகளை வெளிப்படுத்தும்
வகையிலேயே வட மாகாணத்தில் தமிழ்மக்கள் சிந்தித்து இவ்வாறு
வாக்களித்து தமது தீர்ப்பினை வழங்கியிருக்கின்றனர்.
இப்படியிருந்தும் எமது மக்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படாமையால் நீதி இங்கு இல்லாது
செய்யப்படுகின்றது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி
பண்டாரநாயக்கவின் பதவி விலக்கு மூலம் இயற்கையின் நியதி
மீறப்பட்டிருக்கின்றது.
யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களின் பின்னர் வட மாகாணத்துக்கான
தேர்தல் நடத்தப்பட்டது. அதுவும் சர்வதேசத்தின் அழுத்தங்களின்
பின்னணியிலேயே இந்தத் தேர்தல் இடம்பெற்றது. இதன் அடிப்படையில்
சர்வதேசத்தின் நோக்கு வட மாகாணத்தின் மீது சார்ந்திருக்கின்றது.
ஜனநாயக ரீதியில் வட மாகாண மக்கள் தமது தீர்ப்பினை
வழங்கியிருப்பதுடன் தமது விருப்புக்களினதும்.
வெறுப்புக்களினதும் வெளிப்பாடு எதிர்காலத்தில் எத்தகையதாய்
அமையப் போகின்றது என்பது தொடர்பில் எதிர்பார்த்தும்
காத்திருக்கின்றனர்.
அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆவது
திருத்தச்சட்டம் உள்ளவாறே அமுல்படுத்தப்படுமா? எழுத்து மூலம் அது
உறுதிப்படுத்தப்படுமா? ஏற்றுக்கொள்ளக்கூடியதும்
நிரந்தரமானதுமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமா என்பது தொடர்பில்
எதிர்பார்த்திருக்கின்றனர்.
யுத்தம் காரணத்தால் பல மில்லியன் தமிழ் மக்கள் ஏற்கெனவே இங்கிருந்து
புலம்பெயர்ந்துவிட்டனர். அவர்கள் தற்போது உலகின் பல்வேறு
நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்தான் தமிழ் மக்களை
இந்நாட்டில் சம பிரஜைகளாக வாழ வைப்பதை விடுத்து அவர்களுக்கு
இன்னல்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி அவர்களாகவே
நாட்டைவிட்டு வெளியேறிச் செல்லும் நிலை ஒன்று
உருவாக்கப்படுகின்றது.
நல்லிணக்கம் குறித்து அரசுதான் அதிகமாக பேசிக்
கொண்டிருக்கின்றது. எனினும்இ இந்து - கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம்
மதத்தலங்கள் எத்தனை எத்தனை அழிக்கப்பட்டுள்ளனஇ
சேதமாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இங்கு சிந்திக்க வேண்டும்.
இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் நேர்மையான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளனவா? குற்றவாளிகள் இனங் காணப்பட்டுள்ளனரா?
என்பது கேள்வியே.
அதேபோன்று எதேச்சாதிகாரப் போக்கில் செயற்பட்டு வடக்கிலும்
கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரின்
தேவைகளுக்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும்
கையகப்படுத்தப்படுகின்றன. இறுதிக்கட்ட யுத்தத்தை
மனிதாபிமானப்பணியாக அரசாங்கம் வர்ணித்தது. இந்த மனிதாபிமான
பணிகளின்போது மனித அழிவுகளோஇ சேதங்களோ ஏற்படுத்தப்படவில்லை
என்பது தான் அரசாங்கத்தின் வியாக்கியானமாகும். அதாவது
இழப்புகளற்ற கொள்கையில் மனிதாபிமானப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஆனாலும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் செயலாளர்
நாயகம் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பிலான பொறுப்புக்கூறல் தொடர்பில்
வலியுறுத்தியிருந்ததை இங்கு கூற விரும்புகின்றேன். அதேபோன்று 2009
மே மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையிலும் இது
தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் நிலைவரங்களை
ஆராய்வதற்கென ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நிறுவப்பட்டிருந்த
குழுவானது தனது அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி்க்கட்ட
யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள், நியமங்கள்
கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அது
மீறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அதேவேளை
போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் குறித்துரைத்துள்ளது.
மேலும்இ இவ்விடயம் தொடர்பிலும் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற
அழிவுகள் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் இங்கிலாந்தின் சனல்--4
தொலைக்காட்சி ஊடகம் ஆவணப்படமாக வெளியிட்டிருந்தது. இத்தகைய
மனித உரிமை மீறல்களை அரசாங்கம் மறுத்திருக்கின்ற போதிலும் சனல் - 4
வின் சட்டபூர்வமான இந்த முன்னெடுப்புக்களை சர்வதேசம்
ஏற்றுக்கொண்டுள்ளது. எம்மைப்பொறுத்தவரை சனல்--4 ஊடகம் தனது
கடமையை சரிவர நிறைவேற்றியிருக்கின்றது என்பதை நம்புகின்றோம்.
இத்தகையோர் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்
ஐக்கிய நாடுகளின் அலுவலர்கள் தங்களது கடமைகளை சரிவர
மேற்கொண்டிருக்கவில்லை என்பதை ஐ.நா.வின் செயலாளர் நாயகம்
கூறியுள்ளார்.
இதனை ஆராய்வதற்கென்று செயலாளர் நாயகம் குழு ஒன்றையும்
நியமித்திருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னிப்
பரப்புக்குள் நான்கு இலட்ச மக்கள் சிக்குண்டிருப்பதாக நாம்
கூறியிருந்தோம். இருந்தும் திட்டமிடப்பட்ட வகையில் அங்கிருந்த
மக்களின் எண்ணிக்கை அரசாங்கத்தினால் குறைத்துக்கூறப்பட்டது.
பின்னர் அங்கிருந்து இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் இராணுவப்
பகுதிக்குள் வந்து இராணுவத்திடம் தஞ்சமடைந்தனர். இவர்களில்
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தோரும் இருந்திருக்கலாம். இவ்வாறு
எண்ணிக்கை குறைத்து மதிப்பீடு செய்ததன் மூலம் அவர்களுக்கான உதவிகள்
சென்றடையாமை குறித்து இன்று கேள்வியெழுந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை தனது பணிகளை சரியான முறையில்
நிறைவேற்றியிருந்தால் இத்தகைய மனித அவல பிரச்சினை
இடம்பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது. இதனடிப்படையில்தான்
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சர்வதேச சமூகம் சரியான முடிவுகளை
எடுப்பதற்கு தவறியிருந்ததாக ஐ.நா. செயலர் கூறியுள்ளார். மேலும்இ
ஐக்கிய நாடுகள் சபையின் 62ஆவது அமர்வில் பேசிய ஐ.நா செயலாளர் நாயகம்
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தனது பணிகளை மேற்கொள்வதிலிருந்து
ஐ.நா. அலுவலகம் தோல்வியடைந்திருந்ததாக கூறியிருந்தார். இந்த
அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
1958, 1561, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளின் காலப்
பகுதிகளில் எல்லாம் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள்
கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. எனினும் அத்தகைய
காலப்பகுதிகளில் இத்தகைய தாக்குதல்களை தமிழ்மக்கள் எதிர்த்து
நிற்கவில்லை. 1983 வரை புலிகள் தோற்றம்பெறவில்லை. அதன் பின்னரே
உருவாக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் அதேவேளை தமிழ் மக்களின் அரசியல்
உரிமைகளையும் பறிப்பதுதான் தற்போதைய அரசாங்கத்தின்
கொள்கையாகவிருக்கின்றதா எனக் கேட்க விரும்புகின்றேன்.
சர்வதேச ரீதியான புலிகளின் தொடர்புகள் தகர்க்கப்பட்ட அதேவேளை
ஐரோப்பிய நாடுகளும் அவ்வமைப்பை தடை செய்தன. விடுதலைப்புலிகளை
அழி்ப்பதற்கு சர்வதேசம் இலங்கை அரசுக்கு பாரிய ஒத்துழைப்புகளை
வழங்கியது. புலிகள் அழிக்கப்படுவதற்கு சர்வதேசம் வழங்கிய
ஒத்துழைப்பானது தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற நிரந்தரமான
ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் ரீதியிலான தீர்வொன்றினை தமிழ்
மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆகும்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் படு கொலை செய்யப்பட்டனர். என்ற
உண்மையை மூடி மறைப்பதற்காகவே முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த
மக்களை சந்திப்பதற்கான அனுமதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
சிவில் அமைப்புக்களுக்கும் ஊடகங்களுக்கும் மறுக்கப்பட்டிருந்தது.
இடம்பெற்ற குற்றச்செயல்களை மூடி மறைக்க முடியாது. இது பாரதூரமான
விடயமாகும்.
தமிழ்நாட்டையும் புலம்பெயர் தமிழர்களையும் காரணம் காட்டி
பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் சென்றுவிட முடியாது. நல்லிணக்க
ஆணைக்குழுவானது தீர்வுகளுக்கான விடயங்களை பரிந்துரை செய்திருந்தது. நாம்
அரசாங்கத்துடன் 18 சுற்றுக்களைக் கொண்ட பேச்சுவார்த்தையிலும்
பங்கேற்றிருந்தோம். பிரிக்கப்படாத இலங்கைக்குள் நிரந்தரமானதும் தமிழ்
மக்களால் எற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்றுக்கான வரைபினையும் நாம்
எழுத்து வடிவில் சமர்ப்பித்திருந்தோம்.
எமது நிலைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை
வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அது இடம்பெறவில்லை. இறுதியாக 2012
ஜனவரி மாதம் 17இ 18இ 19ஆம் திகதிகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்
அடிப்படையில் தமது நிலைப்பாடுகளை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இருந்த
போதிலும் அதனை செய்யாது பேச்சுவார்த் தையிலிருந்து அரசு விலகிக் கொண்டது.
அத்துடன் இது தொடர்பில் ஆராய்வ தற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்
பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டது. அரசாங் கத்தினால் நியமிக்கப்பட்ட
பாராளுமன்ற தெரிவுக்குழுவானது அரசின் கூட்டணிக் கட்சிகளை சார்ந்தது என்ற
படியால் அதில் எமக்கு நம்பிக்கை கிடையாது.
மேலும், அரசியல் தீர்வொன்றை வழங்கும் நோக்கில் இக்குழு அமைக்க
ப்பட்டிருக்கவில்லை என்பதால் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு இணைந்து கொள்வதற்கு தயார் இல்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக