தமிழீழ மண்மீட்புப்
போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்து விதையான மாவீரர்களின்
குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி பிரித்தானியாவில்
நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தென்மேற்கு லண்டன், சனிக்கிழமை (23.11.13) மாலை 7
மணியளவில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர்
கவிஞர் திரு கந்தையா இராஜமனோகரன் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றி
வைக்க நிகழ்ச்சி ஆரம்பமானது.
தொடர்ந்து பொதுச்சுடரினை லெப் கேணல் சந்தோசம் மாஸ்டர் அவர்களின் சகோதரர்
திரு.தவநேசன் அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மாவீரர்
சுது அவர்களுடைய தாயார் திருமதி ரமணி சதானந்தன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி
வைத்தார்.தொடர்ந்து இடம்பெற்ற மலர் வணக்கத்தை அடுத்து திரு கந்தையா
இராஜமனோகரன் அவர்களுடைய வரவேற்புரையும், ஊடகவியலாளர்கள் ச.ச.முத்து , பரா
பிரபா ஆகியோருடைய உரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சியில் மாவீரரின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து வாழ்ந்து
கொண்டிருக்கும் மாவீரர்களின் அன்பு உறவுகள் மாவீரர் நினைவுச் சின்னங்கள்
வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். நினைவுச் சின்னங்களை திரு கந்தையா
இராஜமனோகரன் அவர்கள் வழங்கினார். கலங்கிய விழிகளுடனும் கனத்த இதயங்களுடனும் மாவீரரின் உறவுகள்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக