மன்னார் பனங்கட்டிக்கொட்டு - எமிழ் நகர் கிராமத்தில் உள்ள தொலைத் தொடர்புக்கோபுரம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப்புலிகளின்
தேசியக்கொடியான ' புலிக்கொடி ' ஏற்றப்பட்டுள்ளது .
இந்த நிலையில் தகவலரிந்த படைத்தரப்பினர் இன்று திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் .
இராணுவம் , பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துரையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொடியினை அகற்றியுள்ளனர் .
தற்போது மேலதிக விசாரனைகளை படைத்தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த நிலையில் இராணு புலனாய்வுத்துரையினர் குறித்த சம்பவத்தை முடிமறைத்து
விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இச்சம்பவத்தை மன்னார் காவல் துறையினர் மறுத்துள்ளனர் . அவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்என இணையத்தளங்கள் செய்தி வேளியிட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக