ஆதி தமிழர்பேரவையின்
மாநில மகளிர் அணி செயலாளர் பழனியம்மாள் என்கிற ராணி (40) 18 சதவீத
இடஒதுக்கீட்டில் 6 சதவீதம் அருந்ததியர்களுக்கு வேண்டும் என்கிற கோரிக்கையை
வலியுறுத்தி இன்று காலை அம்பேத்கார் சலை முன்பு தீக்குளித்தார்… இவர்
திருச்சி பாலக்ரை கால்நடை மருத்துமனையின் உதவி பராமரிப்பாளர்.
மருத்துவமனையில்
அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘’அருந்திய இன மக்கள் தினம் தினம்
வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களூடைய வறுமையை போக்க
வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக தீக்குளித்தேன்.
தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கிட்டை கோரி தீக்குளித்தேன்’’ என்று
தெரிவித்துள்ளார்.
கடந்த
இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் இதே ஆதிதமிழர் பேரவையின்
பிரமுகர் நீலகண்டன், 18 சதவிகிதத்தில் 6 சதவிகிதம் அருதியருக்கு இட
ஒதுக்கீடு கோரி தீக்குளித்து மரணம் அடைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக