'பொதுநலவாய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் செல்லமாட்டேன் ' என
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .வலி . வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் , வீடழிப்பினைத்
தடுத்து நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால்
நடைபெற்று வரும் உண்ணாவிரதப் பேராட்டத்தின் இரண்டாவது நாளில் ( 13 )
கலந்துகொள்ள வந்த முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து
தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார் .
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்த முடிவுக்கு அமைவாக
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளப்
போவதில்லை ' என அவர் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக