சென்னையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, கோயம்பேடு பணிமனையில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக, மெட்ரோ ரயிலுக்கான உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி அவர் துவக்கி வைத்தார்.
மெட்ரோ ரயிலில், குளிர்சாதன வசதி, சிறப்பு இருக்கை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை முதலமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார்.முதற்கட்டமாக, 800 மீட்டர் தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்கான ரயில் பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம், பகுதி வாரியாக சுமார் ஒராண்டு காலத்திற்கு நடைபெறும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக