சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

6 நவம்பர், 2013

காமன்வெல்த்மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா? நாளைமுடிவு

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு, தமிழகத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சிகளின் தேசியத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், நாளை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் தலைமையில் நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து விவாதித்து, முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சியின் வெங்கையா நாயுடு, சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் நிலை இதற்கு எதிராக உள்ளது.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்ற தமிழக  பாஜகவின் கருத்தை கட்சி தலைமையிடம் வலியுறுத்துவதற்காக தமிழக பாரதிய ஜனதா சார்பில் மூன்று பேர் கொண்ட குழு டெல்லி சென்றுள்ளது.

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல. கணேசன், லட்சுமணன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 
இதேபோல, மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் எடுக்கும் முடிவே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு ஆகும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீம் அஃப்சல், தேர்தல் வெற்றி தோல்விகளை பற்றி கருத்தில் கொள்ளாமல், தேசிய நலனை கருத்தில் கொண்டே இவ்விஷயத்தில் பிரதமர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரோ, இந்திய அரசின் பிரதிநிதிகளோ பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை அரசு போர்க்குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்ட அரசு என குற்றம்சாட்டியுள்ள அவர், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை அளிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் அது செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்டு வருவதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஜெயந்தி நடராஜன், இந்த விஷயங்கள் குறித்தெல்லாம் நேரில் பேச நேரம் ஒதுக்கித் தருமாறும் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக