சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

16 டிசம்பர், 2013

61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன் (படங்கள் இணைப்பு)

 
மரணப் படுக்கையில் கிடந்த தாத்தாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக 8 வயது சிறுவன், 61 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தென்னாப்பிரிக்காவில் உள்ள ட்சுவானே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 8 வயது பேரனின் திருமணத்தை
பார்த்துவிட்டு கண்ணை மூடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  
சிறுவனின் தாயான தனது மகளிடம் கூறி, அதே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான ஹெலன் ஷாபாண்டு என்ற 61 வயது பெண்ணை எட்டே வயது நிரம்பிய சனேலே மசிலேலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவர் ஏற்பாடு செய்தார்.  முகூர்த்தத்திற்கான நல்ல நேரம் குறிக்கப்பட்டு, சுமார் 100 உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு, ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.  இந்த வினோத திருமணம் குறித்து சிறுவன் மசிலேலாவிடம் கேட்டபோது, ‘ஹெலனை திருமணம் செய்துக்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன்’ என்று கூறியுள்ளான்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக