புழக்கத்திலுள்ள 2000 ரூபா நாணயத்தாள்களை பாவனையிலிருந்து விலக்கும் எத்தகைய
தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.
இது தொடர்பில் வெளிவரும் உண்மைக் குப் புறம்பான தகவல்களை முற்றாக நிராகரித்துள்ள
மத்திய வங்கி 2000 ரூபா நாணயத்தாள்களை பாவனையிலிருந்து விலக்கும் எத்தகைய
தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும், அதற்கான அவசியம் ஏற்படவில்லை என மத்திய வங்கி
உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பல்வேறு வதந்திகள் வெளிவரும் நிலையில் புழக்கத்திலுள்ள இரண்டாயிரம்
ரூபா நாணயத்தாள்களை பாவனையிலிருந்து விலக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளதா என
மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவரிடம் வினவிய போது கூறியதாவது:
மாலபே பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 2000 ரூபா போலி நாணயத்தாள்கள்
கைப்பற்றப்பட்டன. எழுபது இலட்சம் ரூபா என்பது எமது பொருளாதாரத்திற்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. அத்துடன் அச்சடிக்கப்பட்ட போலி நாணயத்தாள்கள் 70
இலட்சத்தையும் கைப்பற்றியாயிற்று.
இதேவேளை, நாடு முழுவதிலுமுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் போலி நாணயத்தாள்கள்
சென்றுள்ளதுடன் அவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பரிமாற்றப்பட்டுள்ளதாக இரகசிய
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த போலி நாணயத்தாள்கள் வங்கிகளிலுள்ள பணம் கணக்கிடும்
தன்னியக்க இயந்திரத்திலும் அகப்படவில்லை. கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட போலி நாணயத்தாள்களில் இரண்டாயிரம் ரூபா
நோட்டொன்று (29) பேருவளை ஹட்டன் நஷனல் வங்கியில் கொடுக்கல் வாங்கல் செய்தவரின்
கைக்கு கிடைத்துள்ளது. அந்த வாடிக்கையாளர் அப் பணத்தை பேருவளை இலங்கை வங்கியில்
வைப்பிலிடும் போது அந்த போலி நாணயத்தாள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்ட நிதி நிறுவனங்களில் இந்த போலி
நோட்டுக்கள் பரிமாற்றப்பட்டிருக்கலாம்.
வங்கிகளிலுள்ள பணம் கணக்கிடும் தன்னியக்க இயந்திரங்களில் கூட இந்த போலி நாணய
நோட்டுக்கள் அகப்படவில்லை. இதற்கான காரணம் அந்த இயந்திரங்கள் உயர்ந்த தரத்தில்
இல்லாததே என்று இரகசிய பொலிஸார் தெரிவித்தனர். எனவே இந்த தரமற்ற இயந்திரங்களை அகற்றி
விட்டு பணம் கணக்கிடும் போது போலி கோட்டுக்களை சுட்டிக்காட்டும் தரமான இயந்திரங்களை
பயன்படுத்துமாறு இரகசிய பொலிஸாரால் ஆலோசனை வழங்கப்பட்டு ள்ளது.
நீதிபதி ஒருவர் காசோலையொன்றை மாற்றும் போது இரண்டாயிரம் ரூபா போலி நாணய நோட்டொன்றும்
கொடுக்கப் பட்டுள்ளது.
அநேகமான வங்கிகள் பயன்படுத்துகின்ற பணம் கணக்கிடும் தன்னியக்க இயந்திரங்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதம் பலவீனம் இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது.
இதனால் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன இயந்திரங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை மோசடியான பண பரிமாற்று வர்த்தகத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளவரின் பிரதான
சிஷ்யர் ஒருவர் இருபது (20) இரண்டாயிரம் ரூபா போலி நோட்டுடன் கைது செய்யப்பட்டார்.
இவர் இந்த போலி நாணய நோட்டுக்களை மாற்றும் போது கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்கென நியமிக்கப்பட்ட பிரதான சந்தேக நபர்கள்
சிலரை கைது செய்ய ரகசிய பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக