சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 டிசம்பர், 2013

கோத்தாபய ராஜபக்ஷ, இந்தியாவுக்கு இரகசியப் பயணம் -- முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு

பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, இந்தியாவுக்கு குறுகிய இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
 
குறுகிய காலப் பயணம் ஒன்றை
புதுடெல்லிக்கு மேற்கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ, வியாழக்கிழமை காலை, இந்திய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். 
 
இதையடுத்து, கொழும்பு திரும்ப முன்னதாக, வௌ்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும், அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 
பொதுநலவாய நாடுகளின் மாநாடு முடிவடைந்த பின்னர், நடந்துள்ள முதலாவது இருதரப்பு சந்திப்பான இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 
இதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டத்தை, முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி, இந்தியா வலியுறுத்தி வருகின்றது. அதேவேளை, மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ஷ கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இலங்கை அரசாங்கத்தில் செல்வாக்குமிக்க ஒருவராக உள்ள அவரது இந்தியப் பயணம் முக்கியமானதொன்றாக புதுடில்லி அதிகார வட்டாரங்களில் கருதப்படுகிறது. 
கோத்தாபய ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் தொடர்பாக, இந்திய அரசாங்கமே இலங்கை அரசாங்கமோ எந்த தகவலையும் வெளியிடவில்லை. 
 
பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னதாக, கோத்தாபய ராஜபக்ஷ புதுடில்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அது தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை அதிகளவில் ஏற்படுத்தும் என்பதால், அவரது புதுடில்லி வருகையை பிற்போடும் படி இந்தியா கேட்டிருந்தது. 
இந்தநிலையில், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்த சூழலில், பாதுகாப்புச்செயலரின் புதுடில்லிப் பயணம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக