சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 டிசம்பர், 2013

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பின் போது,

மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காணிப் பிரச்சினைகள், இராணுவத்தினரின் தலையீடுகள், அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம், அமைச்சர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாடுகள், மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், மீள்குடியேற்ற கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகள் உட்பட மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்; முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான பிரிமூஸ் சிராய்வா, ஜீ.குணசீலன், அயூப் அஸ்மீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக