யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும்
பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
காதலில் ஏற்படும் முரண்பாடுகள்
காரணமாகவும் வக்கீரதன்மையுடைய ஆண் வர்க்கத்தினரால் காதல் வலையில் விழும்
பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும்
சம்பங்களும் யாழ்ப்பாணத்தின்
கிராமப்புறங்களில் மேலோங்கி காணப்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள், வன்செயலில்
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கணவன்மார் தடுப்புமுகாமிலுள்ளவர்களின்
மனைவிமார்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவங்களும்
காணப்படுகின்றனவென குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைக்களுக்கு சட்டத்தின்
உதவியுடன் தீர்வைப் பெற்றுக்கொடுக்க தாங்கள் முயன்று வருவதாக யாழ். பொலிஸ்
நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக