சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

12 டிசம்பர், 2013

இராணுவ பிரசன்னம் மோசமான நிலையில் இன்னமும் இருக்கின்றது – ஐ நா பிரதிநிதி ஷலொகா பியானி

 
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், அது குறித்த அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் போர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அங்குள்ள தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல் ரீதியான
தன்னாதிக்கம், அவர்களது இனப்பெருக்கத்துக்கான உரிமை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், காணிகளுக்கான உரிமை பாதுகாக்கப்படுவதுடன், உரிய விகிதத்தில், ”தேசிய பாதுகாப்புக்கான இராணுவ கரிசனைகளும், பொதுமக்களின் நடமாடுவதற்கான, வாழ்வதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான உரிமையும்” சமநிலையில் பேணப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இராணுவ பிரசன்னம்
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விபரங்களில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதுடன், பொதுமக்கள் செயற்படும் இடங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30 வருட போரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போருக்குப் பின்னர் நிவாரண நடவடிக்கைகளில் இருந்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மாறுகின்ற காலப்பகுதியில், இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை அரசாங்கமும், வளர்ச்சிக்கான செயற்பாட்டாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஷலொகா பியானி தெரிவித்துள்ளார்.
போரில் இடம்பெயர்ந்த அகதிகளை மீளக்குடியமர்த்த  சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், கணிசமான தொகையினர் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையிலேயே தொடர்வதாகவும், இருப்பிடங்களுக்கு திரும்பிய பலர் மோசமான நிலையில் இன்னமும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக