கற்றுக்
கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்திட இலங்கை அரசுக்கு அறைகூவல் விடுக்கும்
தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் அமைதியை பழைய நிலைக்கு கொண்டுவந்துள்ளமையை புகழ்ந்து
வடமாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டமையை வரவேற்றும் ஐரோப்பிய
ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரை நிகழ்த்தியிருந்த போதிலும்
முன்னர்
யுத்தம் மூண்டிருந்த பிரதேசங்களில் அரச இராணுவப்படைகள்
குறிப்பிடத்தக்க அளவில் தொடர்ந்தும் பிரசன்னமாயிருப்பது குறித்தும்
அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் அடாவடித்தனங்கள் மற்றும் மனித உரிமை
மீறல் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் தொடர்பாகவும் தங்கள்
விசனங்களைத் தெரிவிக்கவும் தவறவில்லை.
மேற்படித்
தீர்மானமானது நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணைகள், இராணுவப்
பிரசன்னத்தைக் குறைத்தல், காணித் தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கான
பொறிமுறைகள் சம்பந்தமான பரிந்துரைகளை முழுமையாக
நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்த
வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றது.
இந்தவார முற்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்த ஐரோப்பிய
பாராளுமன்றத் தூதுக் குழுவினர் நாட்டில் நீதி மற்றும் நல்லிணக்கம்
ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை
எடுக்க வேண் டுமென அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தன.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் குறிக்கும் முகமாக இலங்கையில்
உள்ள ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைக்குழுத் தலைவர்களின்
இணக்கப்பாட்டுடன் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் இலங்கையில்
யுத்தம் முடிவடைந்த பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றங்கள்
குறிப்பாக மீள்குடியேற்றம் மற்றும் நிர்மாணப் பணிகள் விடயத்தில்
ஏற்பட்டுவருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறெனினும் நீதித்துறை மற்றும் சட்டவாட்சி சுயாதீனம்
ஆகியவற்றை மேம்படுத்தல், கருத்துவெளியிடும் சுதந்திரத்தைப்
பலப்படுத்துதல், மதங்களை அவமதிக்கும் செயல்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்தல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல்
துஷ்பிரயோகங்களைத் தடுத்தல் ஆகியவற்றில் மேலும் பல சவால்கள்
தொடர்ந்தும் ஏற்பட்டுவருவதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
அரசுக்குச்சவாலாக அமையும் எஞ்சியுள்ள பணிகளில் உதவக் கூடிய சர்வதேசப்
பங்காளிகளின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்களுடன் உரிய பேச்சுவார்த்தை முய
ற்சிகளில் ஈடுபடுமாறும் இலங்கையில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஐரோப்பிய
ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக