சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

14 டிசம்பர், 2013

"புதிதாக வழங்கப்படவுள்ள தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்கள் மத கலாசாரத்தை பிரதிபலித்தால் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது"

 
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ,பர்தாவோ அணிந்தால்  ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார்.
 
நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஓசானிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் 2014 ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் ஆள் அடையாள அட்டையானது  இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே மாதிரியாகவும் , நிற  புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும் எனவும், எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
 
இவ்  ஊடகவியலாளர் மகாநாட்டில் கபே மற்றும் சி.எஷ்.ஆர் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின்  அதிகாரிகள்  ,தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக