சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

18 டிசம்பர், 2013

மேர்­வி­னுக்கும் யோகேஸ்­வரன் எம்.பி.க்குமிடையில் வாதம். இரா­வணன் தமி­ழனா சிங்­க­ள­வனா இலங்கை இந்து நாடா? பெளத்த நாடா?

இராவணேஸ்வரன் தமிழனா - சிங்களவனா ? இலங்கை இந்து நாடா பெளத்த நாடா என்பது
தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான சீ . யோகேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சபையில் கடும் வாதம் ஏற்பட்டது . இலங்கை இந்து நாடு என்றும் சிவபக்தனான இராவணேஸ்வர மன்னன் இலங்கையை அரசாட்சி புரிந்ததாகவும் கூறி வரலாறுகளை எடுத்துக்காட்டி யோககேஸ்வரன் எம்.பி. பேசினார் .
 
இதன்போது யோகேஸ்வரன் எம்.பி. யின் எடுத்துக்காட்டல்களை உடனடியாக மறுத்துரைத்த அமைச்சர் மேர்வின் சில்வா , யோகேஸ்வரன் எம்.பி. யின் கருத்துக்கு மாறான வாதத்தை முன்வைத்து இதிகாசங்களையும் சுட்டிக்காட்டினார் . இதன்போது இராவணேஸ்வரன் மன்னன் சிங்களவன் என்றும் இலங்கை பெளத்த நாடு என்றும் குறிப்பிட்டார் .
 
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போதே இந்த வாதங்கள் இடம்பெற்றன .
 
முன்னதாகப் பேசிய யோகேஸ்வரன் எம்.பி. இலங்கை என்பது இந்து நாடு என்பதற்கு சான்றுகள் இருப்பதாகக் கூறி வரலாற்று தடயங்களையும் முன்வைத்தார் . அத்துடன் இராவணேசன் என்ற மன்னன் இலங்கையை ஆட்சிபுரிந்த தமிழன் என்றும் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் இந்து மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு தனது மகன்மாருக்கு இந்து மதப் பெயர்களை சூட்டிய வரலாறும் இருப்பதாக சுட்டிக்காட்டினார் .
 
இதன் பின்னர் பேசிய அமைச்சர் மேர்வின் சில்வா கூறுகையில் : - இலங்கை என்பது பெளத்த நாடாகும் . அதில் மாற்றங்களுக்கு இடமில்லை . மேலும் இராவணேஸ்வரன் சிங்கள மன்னனாவான் . புத்தகங்கள் எதனையும் கூறமுடியும் . அது வரலாறு ஆகிவிடாது . அதே போன்று இந்துப் பெண்களை திருமணம் முடித்ததால் இந்த நாடு இந்து நாடாக மாறிவிடாது . வரலாறுகளை திசை திருப்புவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக