காவற்துறையினரின் உடையணிந்த இருவர் இருபதாயிரம் யூரோக்களையும்
நகைகளையும் தங்கத்தினாலான லூயி சிலையையும் களவாடிச் சென்றுள்ளனர்.
Val-d'Oise இலுள்ள 84 வயதுடைய பெண்மணி வீட்டிலேயே இந்த நவீனக் களவு
நடந்துள்ளது. வீட்டிற்குள் திருடன் வந்து போயிருப்பதாகக் கூறி வீட்டைச்
சோதனையிடப்போவதாக இந்த இரு காவற்துறையினரின் உடையணிந்தவர்களும் போலி அடையாள
அட்டையைக் காட்டி வீடு முழுக்கச் சோதனையிட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை பகல் HERBLAY இல் இருக்கும் இந்த மூதாட்டியின்
வீட்டிற்குள் சோதனையிட்ட அந்த இருவரும் இருபதினாயிரம் யூரோக்கள்
பணத்தினையும் ஆபரணங்களையும் தங்கச் சிலையையும் களவாடி உள்ளனர்.
ஆபரணங்களினதும் தங்கச் சிலையினதும் பெறுமதிகள் இன்னமும் கணிக்கப்படவில்லை.
சோதனையை முடித்த இருவரும் தமது வாகனத்திலேயே அந்த மூதாட்டியைக்
காவல்நிலையத்திற்குப் புகார் கொடுக்கக் கூட்டிச் செல்வதாகக் கூறி வாகனம்
எடுத்து வருவதாகக் கூறிச் சென்றவர்கள் திரும்ப வரவே இல்லை. இந்த விதமான
திருட்டுக்கள் முக்கியமாக வயதானவர்களைக் குறி வைத்தே
நடாத்தப்படுகின்றதெனவும் அவதானமாக இருக்கும்படியும் உண்மையான
காவற்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக