அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் முன்னாள் தளபதி ஒருவரை
கொண்டு, புதிய விடுதலைப் புலிகளை உருவாக்கும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
சர்வோதயாவின் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு மற்றும் தற்காப்பு தொடர்பில் கடந்த காலங்களில் சில தமிழ் அரசியல்வாதிகள் சந்தித்த தலைவிதியை சந்திக்க நேரிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியை ஒருவரை கொண்டு விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி அமைப்பை மீண்டும் ஏற்படுத்த போவதாக நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்.
வெள்ளை வான் நாடகம் வேறொரு வகையில் முன்னெடுக்கப்படலாம். போர் முடிவுக்கு வந்த பின்னரும் உள்நோக்கங்களுடன் இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
எங்களது நிலங்கள், வியாபாரங்கள், தொழில் வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளதை நாங்கள் காண்கின்றோம். போரினால் விதவையானவர்கள் மற்றும் பெண்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பில்லை.
அரசாங்கம் வடக்கில் பொலிஸாரின் பிரசன்னத்தை அதிகரிக்கவில்லை. மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் எதுமில்லை என்றால் படிப்படியாக இராணுவ பிரசன்னத்தை ஏன் குறைக்கவில்லை?.
தெற்கில் உள்ள நியாயமான சாதாரண மனிதத்தன்மை நிறைந்த சிங்களவர்கள் மத்தியிலும் இந்த கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழர்களும், முஸ்லிம்களும் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிங்களமயப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதை நிச்சயமாக எதிர்க்கின்றனர் என்றார்.
வடக்கு மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டும் நோக்கில் அரசாங்கம் படையினரை நிலைநிறுத்தியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடக்கில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு மக்கள் பிரிவினைவாத நோக்கங்களின் அடிப்படையில் செயற்படுவார்கள் என்ற அச்சமே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளமைக்கான காரணமாகும். படையினர் தங்களது பணிகளை முடித்துக் கொண்டால் அங்கிருந்து வெளியேற வேண்டும். மக்கள் தங்களது வாழ்க்கையை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
இறுதிக் கட்ட போரின் போது பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சர்வதேசம் குற்றச்சாட்டிய படையினர், மனிதாபிமான பணிகளில ஈடுபட்டுள்ளதாக கூறுவதனை யார் நம்புவார்கள்.
வேறு நோக்கங்களின் அடிப்படையிலேயே படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சி எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வோதய அமைப்பின் 57ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக