சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 டிசம்பர், 2013

புலிகளின் பொலிஸாரை விடவும் எமது பொலிஸார் சிறந்தவர்கள் என நிரூபிக்க வேண்டும் : என்.கே. இளங்ககோன்


இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் அறிந்து வைத்திருந்த புலி பொலிஸாரை விடவும் எமது இலங்கை பொலிஸார் வித்தியாசமானவர்கள், நல்லவர்கள் என நிரூபிக்க வேண்டுமென பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் தெரிவித்துள்ளார். 
களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்த கல்லூரியிலிருந்து 240 தமிழ் கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் 233 தமிழ் கனிஷ்ட கான்ஷ்டபிள்கள் வெளியேறினர். வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சிநேகபூர்வமான சேவை வழங்குவது முக்கியம் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் வலியுறுத்தியுள்ளார்.
பயிற்சி பெற்று வெளியேறும் அனைவரையும் வடக்கு மற்றும் கிழக்கிலிருக்கும் பொலிஸ் நிலையங்களில் சேவைக்கு அமர்த்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை மக்கள் அறிந்துள்ள புலி பொலிஸாரை விட இலங்கை பொலிஸார் வித்தியாசமானவர்கள் என இவர்கள் நிரூபிக்க வேண்டுமெனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்க கோன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக