வடமாகாண சபைக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்காது , அந்த மக்களின் ஆணையை அரசு , பணத்தைக் கொண்டு அடக்க முற்பட்டால் அவர்களின் தீர்வு ஆயுதத்தை நோக்கியே
நகரும் " என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித்
பிரேமதாஸ நேற்றுச் சபையில் எச்சரிக்கை விடுத்தார் .
இந்தப் புரட்சிக்கு வடக்கு இளைஞர்களை மீண்டும் தள்ளிவிட வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார் .
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற காணி அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி
மாகாண சபைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும்
கூறியதாவது :
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் , தமது ஜனநாயக உரிமைகளை
வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு வடக்கு மக்களுக்கு வாய்ப்பு
கிடைத்துள்ளது வடக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமது குரலைப்
பதிவுசெய்தனர் .
ஒரு தரப்புக்கு அதிகூடிய மக்கள் ஆணை கிடைத்தது . முதலமைச்சர் தெரிவு செய்யப்பட்டார் . அமைச்சரவை அமைக்கப்பட்டது .
தேர்தல் நடத்தப்படுவதால் மட்டும் பயனில்லை . மக்களின் தேவைகள்
நிறைவேற்றப்பட வேண்டும் . அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் .
குறித்த தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம் என்பதற்காக நிதி
ஒதுக்கீடுகளைச் செய்யாது விடுவதன்மூலம் எதைச் சாதிக்க முடியும் ? இவ்வாறு
பழிவாங்க முயற்சிப்பதன் மூலம் பொது விடயங்களில் வெளிநாடுகள்
தலையிடுவதற்கான பாதைகளைத்தான் அகலத் திறந்துவிடுகின்றோம் .
வடக்கு மக்கள் தமது ஆணையை வழங்கி மாகாண சபை ஒன்றை உருவாக்கியுள்ளனர் .
அதற்கான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் . இது தொடர்பில் உள்ளூராட்சி மாகாண
சபைகள் அமைச்சர் அமைச்சரவையில் குரல் கொடுக்க வேண்டும் . இதுதான்
நியாயமானதும் சரியானதுமான செயற்பாடு - என்றார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக