வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
வீட்டு உரிமையாளரான பெண்ணை கடந்த 15ஆம் திகதி கைது செய்ததுடன் சம்பவம் தெடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் மேற்படி பெண் பொலிஸாருக்கு கடந்த 2011.11.09 அன்று இரவு குறித்த வீட்டில் வசித்து வந்த முனியாண்டி துரைச்சாமி ஆகிய தனது கணவருக்கும் வசந்தகுமாரி ஆகிய தமக்குமிடையில் தகறாறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கணவன் வைத்திருந்த கோடரியை பறித்து கணவனை தாக்கியதால் கணவன் உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் மலசலக்குழியில் சடலத்தை போட்டு மூடியதாகவும் செட்டிகுளம் பொலிஸாருக்கு மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற வவுனியா நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மலசலகுழியை உடைக்குமாறு பணித்து அதற்குள் உள்ள பொருட்கள் மனித உடல் எச்சங்களை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்திருந்தார்.
இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக