அண்மையில் மிகப் பெரும்பாண்மை வாக்குகளுடன் வடமாகாண சபை அங்கத்தவராக தெரிவு
செய்யப்பட்ட அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமண்ற அங்கத்தவரும்,
வெளிநாட்டுறவு பாதுகாப்பு குழு அங்கத்துவருமான கிரிஸ்டியான், நூர்கயும்,
ஆளும் கட்சி அங்கத்தவர் ஹெல்கே ஊர்டென், வெளிநாட்டுறவுகள் அமைச்சின்
அதிகாரி ஆகியோரைச் சந்தித்து யுத்த முடிவிலும் அதற்கு முன்னரும்
காணாமற் போனோர், சரணடைந்த தன் கணவர் அடங்கலான விடுதலைப்போராளிகள், அரசியல் கைதிகள் நிலைமை, மற்றும் போர் நிமித்தம் விதவைகளான பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

இவரோடு உள்ளுராட்சிமன்ற அரச கட்சியைச் சேர்ந்த
ஸ்டீவன் புஸ்பராஜா மற்றும் கண்ணன் நாகேந்திரா ஆகியோரும் இச் சந்திப்புகளில்
பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக