சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

16 பிப்ரவரி, 2013

இலங்கையின் யுத்த முகத்தை கிழிக்கிறது சனல் 4! அதிர்கிறது தென்னிலங்கை!



இலங்கையின் யுத்த முகத்தை கிழிக்கிறது சனல் 4! அதிர்கிறது தென்னிலங்கை!

சனல்4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற ஆவணப்படத்தில் வெளிக் கொண்டு வந்திருந்த குற்றச்சாட்டுககள் தொடர்பில் மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதில் முன்வைக்கப்பட்ட போரின் போது குண்டு வீச்சால் ஏற்பட்ட பொதுமக்களின் உயிர்ச் சேதங்கள் தொடர்பான குற்றச்சாட்டை சிறிலங்காவின் இராணுவ நீதிமன்றம் மறுத்திருந்தது.
குண்டுத் தாக்குதலற்ற பகுதிகள் என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால் இன்னும் ஒரு 500 மீட்டர் தூரம் வரை, இராணுவத் தளபதிகள் துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக விஸ்தரித்துக் கொண்டனர்.

சர்வதேச மனிதநேய சட்டங்களையும், போர்ச் சட்டங்களையும், போரின் எல்லா கட்டங்களிலும் அனுசரித்த ஒரு கட்டுப்பாடான இராணுவமாகவே சிறிலங்கா இராணுவம் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறிலங்கா இராணுவ நீதிமன்றத்தினால் கருத்துரைக்கப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நியாயப்படுத்தல்களை சனல்4 தொலைக்காட்சி நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக நிகழ்ச்சி தயாரிப்பாளர் கேலம் மக்ரேம் பிபிசியிடம் கருத்து வெளியிடும் போது தெரிவித்ததாவது,

இதுபோல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக் கொண்டு தங்களை நிரபராதிகளாக அறிவித்துக் கொள்ளும் வரலாறு இங்கே இருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இதில் புதிதாக எதையும் சொல்லவில்லை. எங்களிடம் யாரும் பேசவில்லை, யாரும் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என்று அவர் கூறினார்.

சிறிலங்கா இராணுவம் யுத்த சூனிய பகுதிகளில் குண்டு தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டு பகுதிகளை இலக்கு வைத்தார்கள். அவர்கள் பலரை கொன்று குவித்தனர். உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இது இராணுவம் தன்னைத்தானே விசாரித்து, தன்னை நிரபராதி என்று முடிவு கட்டும் மற்றுமொரு விசாரணை. இதில் எதையும் மாற்றாது என்று என்றார் கேலம் மக்ரே மேலும் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் ஏறிகணைத் தாக்குதலால் கொத்துக் கொத்தாக பலியாகியிருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக