இலங்கையில் மனிதாபிமான பணிகளுக்கு தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்படும் என சர்வதேச சஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் யுத்த முடிவின் பின்னர் மனிதாபிமானத் தேவைகளைக் கண்டறிந்து அத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதே தமது பிரதான நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள அது, அப் பணிகளுக்காக, இலங்கைக் காவற்றுறையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. சர்வதேச சங்கத்தின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அச்சங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் 90 நாடுகளில் இயங்கி வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 13 ஆயிரம் பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. 1980ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செஞ்சிலுவைச் சங்கம் தமது பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
16 பிப்ரவரி, 2013
இலங்கையில் மனிதாபிமான பணிகளில் தொடர்ந்து பங்களிப்பு; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக