சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 பிப்ரவரி, 2013

இலங்கை அரசு இனப்பிரச்சினை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின், அமெரிக்க இராணுவம் சிறிலங்கா விவகாரங்களில் தலையிடும்!


 

 

சிறிலங்காவில் நிலவும் இனப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின், இந்திய இராணுவம் மட்டுமல்ல, அமெரிக்க, சீன இராணுவமும் சிறிலங்கா விவகாரங்களில் தலையிடும் என நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.ஏகாதிபத்திய தலையீடு, அடக்குமுறை, இனவாதம் முதலான மூன்று காரணங்களை அடிப்படையாகக் கொண்டே அரசு மக்களை அச்சுறுத்துகிறது எனத் தெரிவித்த அவர், தனிநபரின் தேவைகளுக்காக நாட்டில் எவரும் நாடகமாட முடியாது என்றும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அஸாத் ஸாலி நிலையத்தில்  இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நாட்டில் இடம்பெற்று வருகின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து தீர்வொன்றை வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசை வலியுறுத்துகின்றன. இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் உள்விவகாரங்களில் ஏகாதிபத்திய நாடுகள் தலையிடுகின்றன. இனவாதம், அடக்குமுறை முதலான காரணிகளை அடிப்படையாகக்கொண்டு அரசு மக்களை அச்சுறுத்துகிறது.

பெருந்தொகையான பணத்தை சர்வதேச நாடுகளிடமிருந்து கடன்வாங்கி மாபெரும் அபிவிருத்தித் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்துகிறது. இவற்றால் ஒரு பயனும் ஏற்படவில்லை.அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி உருவாகுவதால், அதைத் தடுப்பதற்கு ஏகாதிபத்திய தலையீடு நாட்டில் இடம்பெறுகிறது எனக் கூறுகிறது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றம், கொலைகள், காணாமல்போதல் முதலானவை குறித்து நியாயமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என சர்வதேச நாடுகள் அரசை வலியுறுத்துகின்றன.இவ்வாறான நெருக்கடியான நிலையில், நாட்டில் பிரச்சினை இல்லை என அரசு கூறுகிறது. ஆனால், தேசிய இனப்பிரச்சினை என்ற தீ சிறிலங்காவுக்குள் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருகின்றது. இந்தத் தீயை அணைக்க அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடின், இந்திய இராணுவம் மட்டுமல்ல, அமெரிக்க, சீன இராணுவமும் சிறிலங்கா விவகாரங்களில் தலையிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக