சென்னையில் உள்ள சிறிலங்கா
எயார்லைன்ஸ் அலுவலகம் மீது இன்று காலை அடையாளம் தெரியாத சில நபர்களால்
தாக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள சிறிலங்கா எயார்லைன்ஸ் அலுவலகம் மீது இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உந்துருளியில் பைக்கில் வந்த சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதில், குறித்த அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக இத் தாக்குதல் குறித்து காவற்றுறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்களால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் சிறிலங்காப் படைகளினால் கொல்லப்பட்டதாக வெளியாகிய புகைப்படங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தழிப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வேளையில் இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. |
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
21 பிப்ரவரி, 2013
சென்னையிலுள்ள சிறிலங்கா எயார்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்
(செய்தி-யாழ்தீபன்) புலம்பெயர் தமிழர்களை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக