போர் வெற்றிகொள்ளப்பட்ட போதிலும், சமாதானம் தோல்வியடைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். மக்கள் கட்சியின் தலைவர் விஜயகுமாரதுங்கவின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
மக்கள் கட்சியின் கொள்கைகள் குறித்து
அமைச்சர் ராஜித சேனாரட்ண கருத்து வெளியிட்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
இன்றைய சூழ்நிலைகளின் அடிப்படையில் கருத்து வெளியிடுவோருக்கு நாளை
என்னவாகும் என்று தெரியாது.
கடந்த ஏழு ஆண்டுகளாக நான்
துன்புறுத்தப்பட்டுள்ளேன். ஊடகங்கள் அது குறித்து கேள்வி எழுப்புகின்றன.
ஆனால் நான் அழுத்தங்கள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதில்லை.
அனைத்து மக்களும், அனைத்து நிலைமைகளும் மாற்றமடையும் என்ற கௌதம புத்தரின் கோட்பாட்டை நான் நம்புகின்றேன். என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக