ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி ஐநா செல்லும் நடமாடும்
கண்காட்சி வண்டி “தமிழ் வான் ” இன்று புருசலில் அமைந்திருக்கும் ஐரோப்பிய
ஒன்றியத்தை சென்றடைந்தது.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து இன்று 7 ஆவது நாளாக “தமிழ் வான்”
புருசலில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல அங்கத்துவ நாடுகளின்
அதிகாரிகளுடன் தனது சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது .
இச் சந்திப்பில் கலந்துகொண்ட சிவந்தன் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர்
மக்கள் அவை பிரதிநிதிகள் 65 ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு
மேற்கொள்ளும் இனவழிப்பை எடுத்துரைத்ததோடு , அங்கு சிங்கள அரசால் பல்வேறு
வடிவங்களில் அரங்கேறும் இன அழிப்பை விரிவாக சுட்டிக்காட்டப்பட்டது .
சிறப்பாக போர்க்குற்றம், மானிடத்துக்கெதிரான குற்றம் , இன அழிப்பில்
ஈடுபட்ட சிங்கள அரச அதிகாரிகளை, ராணுவ தளபதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு
வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தப்பட்டது .
தமிழ் வான் நாளைய நாள் 19.02.2013 அன்று தொடர்ந்து பல்வேறு நாடுகளுடனான சந்திப்புக்களை மேற்கொள்ள காத்திருகின்றனர் .
அத்தோடு இன்றைய நாளில்அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக கனடா
தேசத்தில் இருந்து கனடிய தமிழர் தேசிய அவை ஊடக பேச்சாளர் தேவா சபாபதி
அவர்கள் தமிழ் வானுக்கான தமது ஆதரவை தெரிவித்துள்ளதோடு மார்ச் மாதம் 4
திகதி உலகத்தமிழினம் ஐநா நோக்கி பொங்கி எழ வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்துள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக