சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

18 ஜூலை, 2013

பிரித்தானியா இலங்கைக்கு மீண்டும் ஆயுத விற்பனை!

United-Kingdom-Flagமனித உரிமைகள் குறித்து கேள்விக்கிடமான பதிவுகளைக் கொண்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான இராணுவ ஆயுத விற்பனைக்கான 3000இற்கும் மேற்பட்ட ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களை பிரித்தானிய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மீதான கொபன்ஸ் சபைக் குழுக்களை மேற்கோள் காட்டி ஏபிசி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கேள்விக்கிடமாகியுள்ள 27 நாடுகளுக்குமான தற்போதைய ஏற்றுமதி அனுமதிப் பத்திரங்களின் பெறுமதி 12 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்களைத் தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி குழுக்களின் தலைவரும் பழைமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சேர். ஜோன் ஸ்ரான்லி இது பற்றித் தெரிவிக்கையில், குறித்த அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையும் பெறுமதியும் தன்னை திகைப்படைய வைத்துள்ளதாகவும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யவென கைத்துப்பாக்கிகள், சிறியரக ஆயுதங்கள் என்பவை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 600 தாக்குதல் சுழல் துப்பாக்கிகளின் விற்பனைக்கான அங்கீகாரமானது மிகவும் பாரதூரமான கேள்விகளை எழுப்ப வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆயுத ஏற்றுமதி மேம்பாடு மற்றும் மனித உரிமைகளைக் காப்பாற்றுதல் ஆகிய இரண்டும் சட்ட சம்மதம் பெற்ற அரசாங்கக் கொள்கைகளாக காணப்படும் அதே சமயம், தனிமனித சுதந்திரத்தை எண்ணி எண்ணி மக்களை ஏங்க வைக்கும் கொடுங்கோலோட்சும் ஆட்சியாளர்களுக்கான ஆயுத ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கும் அதே நேரத்தில் மனித உரிமைகள் மதிக்கப்படாது அவர்களின் அரசியல் போக்கினை பலமாக விமர்சிப்பதற்குமிடையில் இயற்கையாக அமையப் பெற்ற குழப்பகரமான நிலையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
செய்தி போன்றவற்றை சங்கேத மொழியில் அமைக்கும் கருவி மற்றும் இராணுவ இலத்திரனியலுக்கான பாகங்கள் உள்ளிட்ட 60இற்கு மேற்பட்ட அனுமதிப் பத்திரங்கள் ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகமானவை தொலைத் தொடர்பாடல் துறையுடன் சம்பந்தப்பட்டவையாகும்.
சீனாவுக்கு ஆயுத விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ள போதிலும்கூட அதனை மீறும் வகையில் பிரித்தானியா 1.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் பெறுமதியான இதனையொத்த சிறியரக ஆயுதங்களையும் தொலைத்தொடர்பாடல் சாதனங்களையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளமை கவனிக்கத்தக்கது.
இது குறித்து பி. பி. சி. செய்திச் சேவைக்கு சேர் ஜோன் தெரிவிக்கையில் கணிசமான அளவிலான மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஐரோப்பிய ஒன்றிய வியாபாரத்தடை உத்தரவு தயாாரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதே தனது அபிப்பிராயமாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக