உடுவில் மகளிர் கல்லூரிக்கு முன்னாள் தரித்து நிற்க்கும் முச்சக்கர
வண்டிகளினால் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவிகள்
சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக பெற்றோர்களினாலும் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினாலும்
தெரிவிக்கப்படுகின்றது.
உடுவில் பிரதேச சபைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் தினமும் கல்லூரி பிரதான
வாசலுக்கு அருகாமையில் இந்த முச்சக்கர வண்டிகள் தரித்து நிற்பதாகவும் இதனால்
கல்லூரிக்க வரும் மாணவிகளும் ஏனையவர்களும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும்
மாணவிகள் முதல் பலரும் தெரிவிக்கின்றார்கள்.
குறிப்பிட்ட முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தை கல்லூரிக்கு அருகாமையில் சுமார்
ஐம்பது மீற்றார் தூரத்தில் உள்ள டச்சு விதிக்கு அருகாமையில் தரிப்பதன் மூலம்
கல்லூரிக்கும் பாதிப்பில்லாது முச்சக்கர வண்டிகளுக்கும் பாதிப்பில்லா நிலமை
காணப்படும் எனவும் பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக