தகாத உறவு பேணியதாகவும், மது அருந்தியதாகவும் தெரிவித்து டெபோராவிற்கு
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனைக்கு நோர்வே மனித உரிமை
அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 6ம்
திகதி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் இது தொடாபில் காவல்
நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் டெபோரா தெரிவித்துள்ளார்.
எனினும், காவல்துறையினர் தமது பணத்தையும் கடவுச் சீட்டையும் பறித்துக்
கொண்டு தகாத உறவு பேணியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின்
அடிப்படையில் வழக்குத் தொடர்ந்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியவருக்கு 13 மாத கால சிறைத்தண்டனையே
விதிக்கப்பட்டது எனவும், அதுவும் பாலியல் தாக்குதலுக்காக அன்றி, தகாத உறவு
பேணியமைக்காக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக