சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 ஜூலை, 2013

காணாமல் போன உறவுகளுக்காக வவுனியா மேல் நீதிமன்றத்தின் முன்பாக அமைதி ஊர்வலம்

காணாமல் போனவர்கள் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கு ஆதரவு தெரிவித்து காணாமல் போன உறவுகளால் அமைதி ஊர்வலம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.                

வட  மாகாணத்தில் காணாமல் போனவர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான காணாமல் போனவர்களின் உறவினர்களும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர். 
வவுனியா மேல் நீதிமன்றத்தின் முன்பாக ஒன்று கூடிய ஊர்வலக்காரர்கள் நீதிமன்றத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களின் வழக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தமது அமைதி ஊர்வலத்தை மேற்கொண்டனர்.








 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக