வடக்கில் தேர்தல் நீதியாகவும் நியாயமான முறையிலும் நடை பெறாது போனால்,
இலங்கையில் மீண்டும் ஒரு ஈழப் போர் உருவாகும் என ஐக்கிய தேசியக் கட்சி
எச்சரித்துள்ளது.
அரசு அந்த நிலைமையை உருவாக்கும் வகையில் செயற்படக் கூடாது என அந்தக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கீர்த்திஸ்ரீ மஞ்சநாயக்க தெரிவித்தார். இராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களை ஏமாற்றி வருகின்றது. எனினும் அரசாங்கம் நினைப்பதை செய்து விட முடியாது.
நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலை உலகநாடுகளே அவதானித்துக் கொண்டிருக்கின்றன. இந்த விடயத்தில் அரசாங்கம் நாட்டின் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்ற முடியாது. இதுவரை வடக்கின் பொலிஸ் அதிகாரத்துடன் தேர்தலை நடத்துவதாக அரசு கூறவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என்பதை காண முடிகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள், மாகாண சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் தமது எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பி வந்தனர், எனினும் இந்தியா அவர்களின் வாய்களை அடைத்துவிட்டது.
எதனை செய்தாவது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசாங்கத்தினர் செயற்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் மக்களிடம் கெஞ்சி வாக்குகளை கேட்கின்றனர். தொடர்ந்தும் ஆட்சியை தம்மால் நடத்த முடியாது என்று அரசாங்கத்திற்கு புரிந்து விட்டது. தேர்தலில் தோல்வியடைந்தால், குடும்ப அரசியல் பாதிக்கப்பட்டுவிடும் என்பதும் ஆட்சியாளர்களுக்கு தெரியும். இதனால் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற நினைக்கின்றனர். மேலும் இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு ஆட்சியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங் கத்தின் ஆட்சி காணப்படுகிறது.
இந்த மோசமான ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை பாதாளத்திற்கு இட்டுச் சென்றுள்ளதோடு சர்வதேசத்தையும் ஏமாற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர். அதனை மேலும் தொடர்வதற்கு எவரும் இடமளிக்கமாட்டார்கள் எனவே மிக விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றினை எதிர்பார்க்க முடியும் இதற்கு மக்களே துணையாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக