சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 ஜூலை, 2013

லண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை சிங்கள வைத்தியர் மாட்டினார்!

லண்டனில் பொது இடங்களில் வைத்து பெண் பொலிஸ் ஒருவர் உட்பட பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்ததாகக் கூறப்படும் இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறித்த வைத்தியர் லண்டனில் உள்ள டிரபல்கார் சதுக்கத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பொலிஸ் ஒருவரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது இவரது ஐபோனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும் பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை இலாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதன்போது தன்னை கைதுசெய்ய வேண்டாம் என்றும் மன்னித்து விட்டு விடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.  
சிரேஷ்ட வைத்தியரான இதமல்கொட முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர் எனவும், தற்போது இருதயம் தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2005ம் ஆண்டு அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் இவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார். பிரித்தானிய மருத்துவ கழகம் இவ்வழக்கு தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு மேலதிகமாக என்ன தண்டனை வழங்கப்படும் என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமெனத் தெரிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக