வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அங்கு தமிழ்த்
தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சிக்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ
அச்சம் வெளியிட்டுள்ளார்.
அதனால் அவ்வாறான எந்தவொரு அதிகாரத்தையும் மாகாண சபைகளுக்கு
வழங்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து
வெளியாகும் “ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர்
பஸில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மாகாணப் பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது. இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லை.
மாகாணப் பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது. இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லை.
1988ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். வடக்கு,கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்
தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சித்தது.வடக்குக்குப் பொலிஸ் அதிகாரங்களை
வழங்கினால் மீண்டும் இவ்வாறான ஓரு நிலைமை ஏற்படாது என்பதைத் திண்ணமாகக் கூற
முடியாது.
இதன் காரணமாகவே மாகாணசபைகளுக்கு முழு அளவில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என வலியுறுத்துகின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக