கொழும்பில் சொகுசு வாகனத்தில் விபசாரம்: நான்கு அழகிகள் உட்பட ஐவர்
கைது-சொகுசு வாகனமொன்றில் நான்கு அழகிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு மற்றும்
அதன் சுற்றுப்புறங்களில் பயணம் செய்தவாறு அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய
பெண்ணொருவரை பாணந்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் கொம்பனித்தெரு நவம்
மாவத்தையில் வைத்து கைது செய்துள்ளனர்.
விபசாரத்தில் ஈடுபட்டிருந்த அழகிகளையும் அவர்களை விபசாரத்தில்
ஈடுபடுத்திய களுத்துறையைச் சேர்ந்த பெண்ணையும் அவருக்கு சொந்தமான 25 லட்சம்
ரூபா பெறுமதியான வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
பொலிஸார் கைப்பற்றிய வாகனத்தில் கர்ப்பத்தடை உபகரணங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு விபசார நடவடிக்கையை மேற்கொண்ட பெண் கடந்த 10 வருடங்களாக பெண்களை
இவ்வாறு விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து
தெரிய வந்துள்ளது.
வாகனத்திலிருந்த அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்க ஒரு மணித்தியாலயத்துக்கு
5000 ரூபா முதல் 10000 ரூபா வரை அறவிடப்படுவதாகவும் இப்பணத்தில் 50 சத
வீதத்தை விபசாரத்தை முன்னெடுக்கும் பெண் அறவிடுவதாகவும் தெரிய வந்துள்ளது.
வாகனத்தையும் அழகிகளையும் கைது செய்யும் போது அவர்களிடம் 70000 ரூபாவும்
இருந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்களும் கைப்பற்றப்பட்ட வாகனமும்
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக