சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 ஜூலை, 2013

TNAகுள் குழப்பம் விளைவிக்க முனைய வேண்டாம் – மாவை, சி.விக்னேஸ்வரன்



வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.விக்னேஸ்வரன் ஆகியோரில் ஒருவரை முதல்வர் வேட்பாளராகத் தெரிவு செய்வதில் இன்னும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் மத்தியில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
முதல்வர் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக நேற்று மாலை மூன்றாவது தடவையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூடவிருந்தது.
எனினும், நேற்றைய கூட்டம் காரணம் கூறப்படாமல், நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தநிலையில், வடக்கு மாகாண முதல்வராக, முதல் அரைப்பகுதிக் காலத்துக்கு சி.விக்னேஸ்வரனையும், பின் அரைப்பகுதிக் காலத்துக்கு மாவை சேனாதிராசாவையும் நியமிக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தம்மை முன்வைத்து கூட்டமைப்புக்குள் குழப்பம் விளைவிக்க முனைய வேண்டாம் என்று இவர்கள் இருவரும் கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக