சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

30 ஆகஸ்ட், 2013

ஈழத்தமிழ்விழி விருதுடன் பிரான்சில் 6வது இராகசங்கமம் இசைநிகழ்வு !

      Ort Franc  




 




தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 6வது தடவையாக நடாத்தும் இராகசங்கமம் இசையரங்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 13ம் நாள் இடம்பெறவுள்ளது.
பிரான்ஸ் தமிழ் சூழலில் இசைத்துறையினை பயின்று வரும் எம்மவர்க
ளுக்கான ஒர் அரிய வாய்ப்பாக இராகமாலிகாவாய் இராகசங்கமம் இசைத்திறன் போட்டி அரங்காக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்குபற்றி சிறப்பித்துக் கொள்ளலாம் என தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சு அறிவித்துள்ளது.
இந்நிகழ்வின் சிறப்பாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஈழத்தமிழ்விழி விருதும் இம்முறையும் சிறப்பாக வழங்கப்படவிருக்கின்றது.
இதேவேளை நாடகம் ,மேற்கத்தேய நடனம் ,தாளக்கட்டுக்கு மெட்டுக்கு பாடும் பாடல் - இசைக்கோர்வை என பல நிகழ்சிகளை உள்ளடக்கியதாக இந்நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.
13-10-2013 ஞாயிற்றுக்கிழமை செவ்றோன் சார் லூ பெத் மண்டபத்தில் பிற்பகம் 13:00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக