சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

29 ஆகஸ்ட், 2013

சிரியா அரசு மீது தாக்குதல் - தயார் நிலையில் பிரான்ஸ் சர்வதேச இராணுவம் !

 
சிரிய அரசுக்கு எதிரான சர்வதேச இராணுவ நடவடிக்கை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. இத் தாக்குதலானது ஐ.நா சபையின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ நடாத்தப்பட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிரிய அரசிற்கு ஆதராவான நாடுகளின் வீட்டோ அதிகாரம் மூலம் இத்தாக்குதல் நடவடிக்கை தடுக்கப்படலாம் என்பதால் ஐ.நாவின் அனுமதி கோராமலேயே தாக்குதல் நடை பெற உள்ளது. கடந்த சில் நாட்களிற்கு முன்னர் நடைபெற்ற இரசாயணக் குண்டுத் தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து சர்வதேச சமூகம் சிரியா மீதான தாக்குதலை வலியுறுத்தின.                                                                                   


"இந்த இரசாயணத் தாக்குதலானது எந்த விதமான கண்டணங்களும் இன்றிச் சென்று விட முடியாது. இதற்கான தகுந்த பதிலை தகுந்த முறையில் கொடுக்கப் பிரான்ஸ் தயாராகவே உள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து மக்கள் மீது இரசாயணக் கண்டுத் தாக்குதல் நடாத்திய பசார் அல்-ஆசாத்திற்கு இராணுவ நடவடிக்கை மூலம் தண்டனை கொடுக்க நாம் தயார நிலையிலேயே உள்ளோம்" என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் தெரிவி த்துள்ளார். பிரான்சுவா ஒல்லோந்த நாளை வியாழக்கிழமை  பசார் அல்-ஆசாத்திற்கு எதிரான சிரியத் தேசியக் கூட்டணியின் தலைவரைச் சந்திக்க உள்ளார். இதன் மூலம் புரட்சிப்படையினர்க்ககு மேலும் உதவிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 
எதிர்வரும் சில  தினங்களில்  சிரியாவின வான் பரப்பை பிரெஞ்சுப போர் விமானங்கள் ஊடுருவத் தயாராக உள்ளன. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக