ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண வேட்பாளர் அங்கஜனின்
அணியினருக்கு அக்கட்சியைச் சேர்ந்த சர்வாநந்தா என்ற
வேட்பாளருக்கும் இடையில் சாவகச்சேரியில் நடைபெற்ற துப்பாக்கிப்
பிரயோகத்தில் சர்வாநந்தாவின் வாகன சாரதி படுகாயமடைந்ததன் காரணமாக ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கஜனின் தந்தையான இராமநாதன் என்பவரே யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியச்சகரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கஜனின் தந்தையான இராமநாதன் என்பவரின் அராயகங்கள் தொடர்ததன் காரணமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சர்வாநந்தா என்ற
வேட்பாளரின் அலுவலகத்திற்கு முன்பாக அங்கயன் தேர்தலுக்கான துண்டுப்பிரசுரங்களை
மேற்கொண்ட பொழுது இருவருக்குமிடையில் இடம்பெற்ற வாக்கு வாதம் முற்றிய
நிலையில் இருவரும் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கஜனின் தந்தையாலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்
பட்டுள்ளது. கொடிகாமம் பகுதியில் தொடங்கிய கைகலப்பு ஓட ஓட துரத்தப்பட்டு
சாவகச்சேரி வரை நீண்டுள்ளது.
அங்கஜன் தலை தப்பினால் போதும் என்ற நிலையில் ஓடியதால்
தப்பிவிட்டதாகவும், கட்சியின் தொண்டர்களுக்கே காயம் ஏற்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் யாழில் அங்கஜனின் கடைக்கு முன்பாக தம்பிராசா என்ற
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தனது வாகனத்தில் பயணித்த பொழுது
அவரை இடைமறித்த நாகரீகமற்ற முறையில் காட்டுமிராண்டி தனமாக தம்பிராசாவை
அடித்துத் துன்புறுத்தியுள்ளதுடன் அவருடைய வாகனக் கண்ணாடியையும் உடைத்து
நொறுக்கினார்.
அப்பொழுது அங்கஜனின் தந்தையான இராமநாதன் கைத்துப்பாக்கியைக் காட்டி தம்பிராசாவை மிரட்டியதுடன் காயப்படுத்தியும் உள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக