தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாளை 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
வெளியிடப்படவுள்ளது . யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின்
அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் தலைமையில் இந்த வைபவம்
இடம்பெறும் .
இவ்வைபவத்தில் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.
விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்
ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் , முக்கியஸ்தர்கள் இந்த
வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் .
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு
எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் வடமாகாண சபை மூலம்
மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை
பாதுகாத்து அதற்கப்பால் செல்வதற்கான முயற்சிகள் குறித்து
சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக