சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

2 செப்டம்பர், 2013

ஒலிபெருக்கியை பயண்படுத்தி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரம்

வடமாகாண சபை தேர்தலின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அனைத்துக்கட்சிகளுக்கும் வாகனத்தில் ஒலிபெருக்கியை பயண்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரம் மன்னார் மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைபின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று ஊடங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடமாகாண சபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை அனைத்துக் கட்சிகளும் தமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மன்னார் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் தேசியக்;கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வகையில் வாகனங்கிளில் ஒலி பெருக்கியினை பயன் படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரச கட்சிகளுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு தற்போது பிரச்சார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

இது தொடர்பாக எமது கட்சி சார்பாக மன்னார் தேர்தல் திணைக்களத்திற்கும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடை செய்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலில் உயிர்த்தியாகம் செய்த, தமிழர்கள் நினைவாக, தஞ்சாவூர் விளார் கிராமத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவுச்சின்னத்துக்கு அருகில், தமிழ் அன்னையின் சிலை ஒன்றும் நிறுவப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும் என்று கோரி, ஈழத்தமிழர் ஆதரவு இயக்கத்தின் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு சின்னத்தை திறந்து வைப்பதன் மூலம், உலக தமிழர்களின் அன்பை பெற முடியும் என்பதாலும், ஈழத்தமிழர் ஆதரவு வாக்குகள், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு கிடைக்கும் என்பதாலும், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன திறப்புவிழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- See more at: http://www.newsjvp.com/srilanka/46176.html#sthash.9SzIKcv7.dpufஎஎ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக