சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 செப்டம்பர், 2013

வவுனியா நகரில் இன்று காலை முஸ்ஸிங்கள் காங்கிரஸ் மோதல்

வவுனியாவில் றிசாட் பதியுதீன் - முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோதல்: அறுவர் காயம்           (இரண்டாம் இணைப்பு)

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் இரு குழுக்களுக்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது கபே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரது குழுக்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த கபே அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களை தடுத்து  அவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முகமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே குறிப்பிட்டுள்ளது.  
இந்த மோதலின்போது காயமடைந்த 6 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக