இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு
நடைபெற்றத் தேர்தல்களில், வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்ப வாக்கு விபரங்கள்
வெளியாகத் தொடங்கியுள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா
மாவட்டங்களில் வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்ப வாக்குத் தகவல்கள் முழுமையாக
வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள்
பசுபதி அரியரத்தினம் -27264 வாக்குகள்
தம்பிராசா குருகுலராசா- 26427 வாக்குகள்
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை- 26132 வாக்குகள்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்
கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட வீரசிங்கம் ஆனந்த சங்கரி அவர்களால்
2896 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளவர்களின் விபரங்கள்.
அன்ரனி ஜெகிநாதன்- 9,309 வாக்குகளையும்
சிவப்பிரகாசம் சிவயோகன்- 9,296 வாக்குகளையும்,
துரைராஜா ரவிகரன்- 8,868 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தை பொருத்தவரையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளவர்களின் விபரங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட
வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 வாக்குகளையும்,
கந்தர் தாமோதரம் லிங்கநாதன்- 11,901 வாக்குகளையும்
ம. தியாகராசா- 11,681 வாக்குகளையும்
ஐ.இந்திரராசா- 11,535 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக