இன்று முதல் ஒரு வாரத்திற்கு கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துவதற் குதேர்தல் நடைபெற்ற மாகாணங்களில் தடை
விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன
குறித்த பகுதிகளில் ஊர்வலங்கள் நடத்தப்படும் பட்சத்தில்
சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிறைவுபெற்றதன் பின்னர் இதுவரையான காலப் பகுதியில் வடக்கு
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித
அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக