சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 செப்டம்பர், 2013

மன விரக்தியில் உள்ள ஈ.பி. டிபி யினர் தீவகத்தில் தாக்குதல்


தீவகத்தில் ஈ.பி.டி. பி யினர் தமது தேர்தல் தோல்வியை தாங்கமுடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள் ...நடந்து முடிந்த வடமாகாண தேர்தல் வரலாறு காணாத தேர்தல் வெற்றியை பெற்று இருக்கிறது .. இதில் ஈ.பி.டி. பி படுதோல்வி அடைந்துள்ளது
 
குறிப்பாக இவர்களது கோட்டை என்று மார்தட்டிக் கொண்டு திரிந்த தீவகத்தில் தோல்வி அடைந்தது குறித்து மன விரக்தியில் உள்ள ஈ.பி. டிபி யினர் புளியங்குடல் ஊர்காவற்றுறை வேலணை இதம்பாட்டி சாட்டி நாரந்தனை போன்ற பகுதிகளில் இதுவரைக்கும் கடந்த 3 மணித்தியாலங்களுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னின்று உழைத்த 26 பேருக்கு பொல்லுத்தடிகளால் தாக்கியுள்ளனர் .
இதனால் தீவக மக்கள் அல்லல்ப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . மேலும் இவர்களுக்குப் பயந்து யாழ் வாழும் தமது உறவுகளுக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு விடுத்து ஈ.பி.டி. பி யினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
மேலும் சிலர் ஊர்காவற்றுறை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து இருக்கிறார்கள்
காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தீவக மக்களை காக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக