சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

8 செப்டம்பர், 2013

வடமாகாணசபைத் தேர்தல் பற்றி விபரிக்கிறார் இரா. சம்பந்தன் (வீடியோ இணைப்பு)

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது இரண்டு நாடுகள் தமக்கிடையில் செய்து கொண்டதொரு ஒப்பந்தமாகும்.

அதனை இலங்கை அரசாங்கம் தான் நினைத்தவுடன் இரத்துச் செய்யவோ, இல்லாமல் செய்யவோ முடியாது. எனவே 13ம் திருத்தச்சட்டத்தில் மாகணசபைகளுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கியே ஆகவேண்டும்.
அதற்கான நாங்கள் போராடுவோம். அத்தகைய நெருக்கடி மிக்க போராட்டத்திற்காக மக்கள் எம்மைப் பலப்படுத்த வேண்டும். இதுவொரு போராட்டம் இங்கே வாக்களிக்கும் அனைவரும், எம்மோடு பங்காளிகளாக இருக்கும் அனைவரும் போராளிகள்.
அந்த மனோ நிலையுடன் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பு விகிதம் அதிகரிக்க வேண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வடக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க வேண்டும்.
அதுவே மாகாணசபையில் தமிழர்கள் சாதிப்பதற்காக நங்கள் செய்யக் கூடியதொரு மிகச்சிறந்த காரியமாகும். எனவே மக்கள் ஒன்றிணைந்து வாக்களியுங்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்யுங்கள்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக