சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 அக்டோபர், 2013

சிறிதரன் என்பவர் நிகழ்கால பிரபாகரனே! - ஆனந்தசங்கரி


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் என்பவர் நிகழ்கால பிரபாகரனே! என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி குறிப்பிடுகிறார்.
வாரஇறுதிச் செய்திப் பத்திரிகையொன்றின் நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அவர் தெரிவித்திருப்பதாவது:
‘தற்போது ஸ்ரீதரன்தான் தமிழ் மக்களின் தலைவராக இருக்கின்றார். அவர்தான் நிகழ்கால பிரபாகரன். அந்த முட்டாளின் செய்தியை நான் கேட்கத் தயாராக இல்லை. அவரது இலக்குகளை அடைய அவர் இலகு வழிகளைத் தேடிவருகின்றார்’. ‌என்று ச கூறினார்.
மேலும் வட மாகாணசபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஆனந்த சங்கரியின் பெயரை தவிர்த்து, தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்ட மூவருக்கும் மட்டுமே ஸ்ரீதரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், அம்மூவரும் தான் TNA சார்பாக களம் இறக்கப்பட்டவர்கள் என்ற தோரணையில் பிரச்சாரத்தில் ஸ்ரீதரன் ஈடுபட்டதனால் தான் ஆனந்த சங்கரி தோல்வியை தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. அதனால் சிறிதரன் மீது கடுப்பாகி கொதித்து எழுந்திருக்கிறார் ஆனந்த சங்கரி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக