வடக்கு மாகாணசபைக்காக யாழ்.கைதடியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய
கட்டிடத்திற்கு சம்பிரதாய பூர்வமாக பால்காய்ச்சும் நிகழ்வு இன்று காலை
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களால்
நடத்தப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் 25ம் திகதி வடக்கு மாகாணசபையின் 1ம் அமர்வு இடம்பெறவுள்ள
நிலையில் மேற்படி மாகாணசபை கட்டிடம் மிக வேகமாக கட்டி
முடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 6 தொடக்கம் 7 மணிவரையான சுபநேரத்தில் மேற்படி
பால் காய்ச்சும் நிகழ்வு நடத்தப்பட்டதுடன், ஏனைய மதம் சார்ந்த
சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளும் நடத்தப்பட்டது. இவற்றை முதலமைச்சர்
சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையேற்று நடத்தி வைத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 25ம் திகதி மாகாணசபையின் முதலாம் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக