சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 அக்டோபர், 2013

வடக்கு ‍‍–கிழக்கு இணைவதால் சிறுபான்மையினருக்கு நன்மை கிடைக்குமானால் நாம் ஆதரவு வழங்குவோம்.விக்கிரமபாகு கருணாரத்ன.


வடக்கு , கிழக்கு இணைவதனால் சிறுபான்மை மக்களுக்கு நன்மை ஏற்படுமெனின் அதற்கான
ஆதரவை நாம் வழங்குவோம் . யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழ் மக்கள் அடக்கப்படுவதனால் தான் சர்வதேசம் இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றது என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார் .
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் ஆட்சி முடிவடையும் காலம் நெருங்கிவிட்டது . பொது நலவாய மாநாடு முடிவடைந்த பின்னர் இதற்கான முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார் .
 
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் ,
 
வட மாகாண சபை தேர்தலின் முன்னர் வடக்கு வாழ் தமிழர்களுக்கு அரசாங்கம் சேவைகளையும் உதவிகளையும் வழங்கிய போதிலும் அம் மக்கள் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே வெற்றிபெறச் செய்திருந்தனர் . அங்கு அபிவிருத்தியை விடவும் உரிமைகளும் உணர்வுகளுக்கான சுதந்திரமும் முக்கியம் என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே தமிழ் மக்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன .
அதேபோன்று , வடக்கில் மக்கள் முடிவெடுத்ததைப் போன்று கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களும் தமது உரிமைகளை வென்றெடுக்கப் போராட வேண்டும் . தமது தலைமைத்துவம் சரியானதா ? கிழக்கை பாதுகாக்கக் கூடியதா என்பதை உணர்ந்து அவ்வாறானவர்களை தெரிவுசெய்ய வேண்டும் .
வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒன்றிணைந்து தமிழ் , சிங்கள மக்கள் ஒரு அணியாகத் திரண்டு செயற்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் சிறந்ததொரு மக்கள் சக்தி உருவாகும் . இவ்வாறு ஏற்படுவதை ஜனநாயகத்திற்காகப் போராடுவதை நாமும் ஆதரிக்கின்றோம் .
மேலும் , நாடும் நாட்டு மக்களும் அமைதியாக இல்லாததொரு நிலையிலேயே பொதுநலவாய மாநாடு நடைபெறவிருக்கின்றது . இங்கு இருக்கும் சில சிங்கள , பெளத்த தீவிரவாத சக்திகளால்தான் சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மோசமான நாடாகக் கருதப்படுகின்றது . இதனை அரசாங்கம் கவனிக்காது செயற்படுமேயானால் நாட்டிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் .
குறிப்பாக , முஸ்லிம் மக்களின் மீதான அடக்குமுறைகள் , பள்ளிவாசல்கள் , மத ஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை என தற்போதும் சிறுபான்மை மக்கள் அடக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர் .
தற் - போதும் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை மீது குற்றம் சுமத்தியுள்ளமைக்கும் இச் சம்பவங்களே முக்கிய காரணமாகும் . இந்த நிலைமையினை அரசாங்கம் நிறுத்தாவிடில் சிறுபான்மை இனத்தவர்களுக்கான பாதுகாப்பினை அரசு வழங்காவிடின் குறுகிய காலத்திற்குள்ளேயே சர்வதேசத்தின் நேரடித் தலையீடுகள் இலங்கை மீது ஏற்படுத்தப்படும் .
எனவே , பொதுநலவாய அரச தலைவர் களின் உச்சிமாநாட்டின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் கவிழ்க் கப்படும் . மக்களே தமது முடிவினை காட்டு வார்கள் எனவும் அவர் தெரிவித்தார் .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக